கத்தியை காட்டி மிரட்டி வழிபறி செய்ததாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞர் போலீசில் போலியாக புகார் அளித்து, ’Just Fun’ என்று கூலாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் பிரைடுரிச் வின்செண்ட்(23), இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் வந்துள்ளார். அவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘சென்ட்ரலில் இருந்து கால்டாக்ஸி மூலமாக வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றேன்.
அப்போது உணவு அருந்த இறங்கி, சாப்பிட்டுவிட்டு நடந்து விடுதிக்கு ஜெயராமன் தெரு வழியாக சென்ற போது, அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி கையில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் பொருட்கள் அடங்கிய பையை பறித்து சென்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வின்செண்ட் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் விசாரணையில் ஜெர்மன் இளைஞர், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வளசரவாக்கம் பகுதிக்கு ராபிடோ ஆட்டோ மூலமாக வந்துள்ளார் என தெரிய வந்ததையடுத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெர்மன் இளைஞர் ஆட்டோவில் ஏறும் போது எந்தவித கைப்பையும் கொண்டு வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெர்மன் இளைஞர் கூறிய இடத்தில் அதுபோல ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என போலீசருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஜெர்மன் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது விமான நிலையம் வந்த ஜெர்மன் இளைஞர் அங்கிருந்து ரயில் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து பின்னர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது.
பின்னர், வளசரவாக்கம் போலீசார் ஜெர்மன் இளைஞர் தங்கி இருந்த திருவல்லிக்கேணி விடுதிக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் ராபிடோ ஆட்டோவில் ஏறும் போது எந்தவித கைப்பையும் வைத்திருக்கவில்லை என தெரியவந்தது. மேலும், அவர் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது மிரட்டி பறிக்கப்பட்டதாக கூறிய பொருட்கள் அனைத்தும் அங்கு இருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசார், ஜெர்மன் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் பொருட்களை எடுத்து வந்தது போல் நினைத்துக் கொண்டதாகவும் பிறகு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கும் போது காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் கூறினால் கண்டுபிடித்து தர மாட்டார்கள் எனக் கூறி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு நபர்கள் பிடுங்கி சென்றதாகவும் பொய் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், Just Fun எனவும் ஜெர்மன் இளைஞர் கூலாக கூறியுள்ளார்.
Also Read : பள்ளிகள் திறப்பு... 3 மடங்கு வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிருப்தி
கடந்த இரண்டு நாட்களுக்காக ஜெர்மன் இளைஞருக்காக அலைந்து திரிந்த போலீசார், ஜெர்மன் இளைஞர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வெளிநாட்டு இளைஞர் என்பதால் உயர் அதிகாரிகளிடம் பேசி கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News