புழல் சிறையில் செல்போன் பறித்ததால் ஆத்திரத்தில் காவலர்களை தாக்கிய வெளிநாட்டு கைதிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை புழல் மகளிர் சிறையில் சிறை காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போதை பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கப்பட்டிருந்த உகான்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நான்டேசா மற்றும் மாலத்தீவுகளை சேர்ந்த சம்சியா ஆகிய வெளிநாட்டு பெண் கைதிகள் இருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற சிறைக் பெண் காவலர்கள் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்ய முயன்ற போது ஆத்திரமடைந்த கைதிகள் தங்களிடம் இருந்த செல்போனை கீழே போட்டு உடைத்து பெண் சிறை காவலரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கினர். இதனால் சிறை பெண் காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து வெளிநாட்டு பெண் கைதிகளிடம் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர், ஹெட்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சிறையில் அவர்களுக்கு எப்படி செல்போன் கிடைத்தது? அவர்கள் யாரிடம் பேசினர்? என்பது குறித்து சிறைத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உச்சி வெயிலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பரிதாபம்.. 11 பேர் உயிரிழந்த சோகம்
இதனை தொடர்ந்து தண்டனை பிரிவில் கொலை முயற்சி வழக்கில் அடைக்கப்பட்ட கோட்டீஸ்வரன் என்ற கைதி உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் புழல் சிறையில் அடுத்தடுத்து 2செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puzhal jail