முகப்பு /செய்தி /சென்னை / பள்ளிகள் திறப்பு... 3 மடங்கு வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிருப்தி

பள்ளிகள் திறப்பு... 3 மடங்கு வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிருப்தி

கோப்புப்படம்

கோப்புப்படம்

கோடை விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

பள்ளி, கல்லூரி விடுமுறை காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானக் கட்டணம் 3,675 ரூபாயில் இருந்து, 11,000 ரூபாய் முதல் 14,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று, 3,419 ரூபாயாக இருந்த சென்னை - மதுரை இடையிலான கட்டணம் 10,000 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.

அத்துடன் சென்னை - திருச்சி இடையே வழக்கமாக 2,769 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 9,000 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரையும், சென்னை - கோவை இடையே 3,313 ரூபாயில் இருந்து, 5,500 ரூபாய் முதல் 11,000 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மும்பைக்கு விமான கட்டணம் 6,000 ரூபாயில் இருந்து 12,000 வரையும், டெல்லிக்கு 4,973-ல் இருந்து, 12,000 ரூபாய் வரையும், கொல்கத்தாவுக்கு 5,309-ல் இருந்து 15,000 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.

கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்த போதும், ஏராளமானோர் அதனை பொருட்படுத்தாமல் அதிக கட்டணம் கொடுத்து விமானப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பயண நகரங்கள்வழக்கமான கட்டணம்தற்போதைய கட்டணம்
சென்னை – தூத்துக்குடிரூ.3,675ரூ.11,000 - ரூ.14,000
சென்னை - மதுரைரூ.3,419ரூ.10,000 - ரூ.13,000
சென்னை - திருச்சிரூ.2,769ரூ.9,000 - ரூ.13,000
சென்னை - கோவைரூ.3,313ரூ.5,500 - ரூ.11,000
சென்னை - மும்பைரூ. 6,000ரூ.8,000 - ரூ.12,000
சென்னை - டெல்லிரூ.4,973ரூ.8500 - ரூ.12,000
சென்னை - கொல்கத்தாரூ. 5,309ரூ.9,000 - ரூ.15,000

top videos

    First published:

    Tags: Chennai, Flight, Ticket booking