முகப்பு /செய்தி /சென்னை / மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்..!

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்..!

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள்

பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய தனியார்  மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

தாம்பரம் மாநகராட்சிகுட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. இதனை கண்காணித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் இன்று ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுதாதாரத் துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் தகுந்த ஆதாரங்களை திரட்டிய நிலையில், அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் அபராதம் கட்ட நோட்டிஸ் வழங்கப்பட்டது.

Also see... விஏஓ மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

மேலும், இதுபோல் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முதல் முறை  அபராதமும் தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: சுரேஷ், சென்னை ஏர்போட்

First published:

Tags: Chennai, Medical Waste