முகப்பு /செய்தி /சென்னை / விமானத்தில் வந்த 23 விஷப்பாம்புகள்... அதிர்ந்துபோன சுங்கத்துறை அதிகாரிகள்..! - பகீர் வீடியோ

விமானத்தில் வந்த 23 விஷப்பாம்புகள்... அதிர்ந்துபோன சுங்கத்துறை அதிகாரிகள்..! - பகீர் வீடியோ

பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து 23  பாம்புகளை உயிருடன் மீட்பு

பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து 23 பாம்புகளை உயிருடன் மீட்பு

Chennai Airport | பிடிபட்ட பாம்புகள் அனைத்தும், ஆப்பிரிக்க கண்டத்தில் அடர் காடுகளில் காணப்படும் கொடிய விஷம் உடைய பாம்புகள் என தெரிய வந்தது.

  • Last Updated :
  • Chennai, India

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில், கொடிய விஷம் உடைய பாம்புகளை, கூடைகளுக்குள் வைத்து கடத்தி வந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூரில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து 23 பாம்புகளை உயிருடன் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொடிய விஷம் கொண்ட பாம்புகளைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாம்புகளை எடுத்து வந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட பாம்புகள் அனைத்தும், ஆப்பிரிக்க கண்டத்தில் அடர் காடுகளில் காணப்படும் கொடிய விஷம் உடைய பாம்புகள் என தெரியவந்தது. பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார், பாம்புகள் கடத்தப்பட்டதன் காரணம் என்ன என விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாம்புகளை ஏர் ஏசியா விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் அரங்கேறிய இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Chennai Airport, Crime News