முகப்பு /செய்தி /சென்னை / சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையின் அதிகம் மக்கள் கூடும் முக்கிய பகுதியாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

மிரட்டலை அடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மிரட்டல் பொய்யானது என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பெரியமேடு போலீசார் நடத்திய விசாரணையில் தொலைபேசி அழைப்பு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த 21 வயதான மணிகண்டன் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

Also Read : தவறி விழுந்த நண்பனை காப்பற்ற சென்ற இளைஞர்... ரயில் மோதி பலியான சோகம்...!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மணிகண்டனைப் பார்ப்பதற்கு நேற்று அவரது தந்தை மருத்துவமனை சென்றபோது தந்தையின் செல்போனை பறித்து அதிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மணிகண்டனின் தந்தை ராமலிங்கத்தை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

top videos
    First published:

    Tags: Chennai, Railway Station