முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

மாதிரி படம்

மாதிரி படம்

chennai Drone | சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

ஜி20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெறும் நிலையில், சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் ரமடா பிளாசா, ஹப்ளீஸ், பார்க் ஹையத் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.

இதனையடுத்து வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடம், மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் நேற்று முதல் 25 ஆம் தேதி வரை டிரோன்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Drone, G20 Summit