முகப்பு /செய்தி /சென்னை / ஜன்னல் வழியாக நகைப்பையை போட்டு சீட் பிடித்த பயணி... பேருந்தில் ஏறியபோது அதிர்ச்சி!

ஜன்னல் வழியாக நகைப்பையை போட்டு சீட் பிடித்த பயணி... பேருந்தில் ஏறியபோது அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் ஜன்னல் வழியாக துண்டுபோட்டு இடம் பிடிப்பதுபோல் நகைப்பையைய் போட்டு இடம் பிடிக்க முயன்ற நபரின் நகைப்பை பறிபோனது.

  • Last Updated :
  • Chennai, India

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் நகை கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருபவர் விக்னேஷ். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி ஏழுமலையிடம் தங்க நகைகளை கொடுத்து சென்னையில் லேசர் கட்டிங் செய்வதற்காக  விக்னேஷ் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, சென்னை பாரிமுனை நகை கடைக்கு சென்று வேலையை முடித்த ஏழுமலை, நகைகள் அடங்கிய பையுடன் அன்று இரவு 7 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த செய்யாறு செல்லும் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஏழுமலை தங்க நகைகள் அடங்கிய பையை ஜன்னல் வழியாக பேருந்து உள்ளே போட்டுள்ளார்.

பின்னர் பேருந்தில் ஏறிச் சென்று பார்த்தபோது நகைப்பை அங்கு இல்லை. இதனைக்கண்டு அவர்  அதிர்ச்சி அடைந்தார். உடனே விக்னேஷிடம் விஷயத்தை ஏழுமலை தெரிவிக்க உடனே அவர் சென்னை புறப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சென்னை வந்த விக்னேஷ் நகை திருட்டு தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையும் படிங்க : 22000 அடி உயரம்- பைலட்டாக மாறிய கமல்.. எங்கு பறந்தார் தெரியுமா? - வைரல் போட்டோ!

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் நகைகளை எடுத்து சென்றவரின் அடையாளங்களை கண்டுபிடித்து நீலங்கரையைய் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 30 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

top videos

    தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் சந்திரசேகரன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பேருந்தில் இடம் பிடிக்க ஒரு சிலர் தங்களது குழந்தைகளை கூட ஜன்னல் வழியாக போட்டு இடம் பிடித்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Chennai, Crime News, Koyambedu, Local News