முகப்பு /செய்தி /சென்னை / போதையில் கத்திகுத்து விளையாட்டு... நண்பர் உள்பட 2 பேரை கொலை செய்தவர் கைது..!

போதையில் கத்திகுத்து விளையாட்டு... நண்பர் உள்பட 2 பேரை கொலை செய்தவர் கைது..!

சென்னை டாஸ்மாக் கடையில் இரட்டைக் கொலை

சென்னை டாஸ்மாக் கடையில் இரட்டைக் கொலை

குடித்துவிட்டு போதையில் வெளியே வந்து தாங்கள் வைத்திருந்த கத்தியை வைத்து மாறி மாறி குத்துவது போன்று விளையாடியுள்ளனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் சாலையில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோழி செல்வம், மனோஜ் ஆகியோர் இருவரும் மது அருந்த வந்துள்ளனர்.

பின்னர் குடித்துவிட்டு போதையில் வெளியேவந்து தாங்கள் வைத்திருந்த கத்தியை வைத்து மாறி மாறி குத்துவது போன்று விளையாடியுள்ளனர். அப்போது போதையில் நிலைதடுமாறி செல்வம் மனோஜை குத்தியுள்ளார்.

இதனை கண்டு தடுக்க வந்த அருகில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரையும் செல்வம் குத்தியுள்ளார். இதில் இருவருக்கும்  காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் வாசிக்கExclusive | வடசென்னை ஐட்ரீம் திரையரங்கில் தீண்டாமையா?

ஆனால்,செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தப்பி ஓடிய கோழி செல்வத்தை உடனே விரட்டிச் சென்று கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான சாலையில் திடீரென இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: அசோக் குமார்

First published:

Tags: Chennai, Crime News