முகப்பு /செய்தி /சென்னை / கனிமொழி கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதி..!

கனிமொழி கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதி..!

கனிமொழி, கணவர் அரவிந்தன்

கனிமொழி, கணவர் அரவிந்தன்

திமுக எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அண்மையில் இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தகவலறிந்து உடனடியாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற கனிமொழி, மருத்துவமனையில் கணவரை உடனிருந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். அரவிந்தனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதால், வேகமாக குணமடைந்துவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

top videos

    இதனிடையே அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரவிந்தனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவரது உடல்நிலை குறித்த விவரங்களை கனிமொழியிடம் கேட்டறிந்துவிட்டு திரும்பினார்.

    First published:

    Tags: Apollo hospital, Kanimozhi