முகப்பு /செய்தி /சென்னை / பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

பாரோட்டாவுக்கு பாயா கேட்ட  பிரச்னை செய்த காவலர்கள்

பாரோட்டாவுக்கு பாயா கேட்ட பிரச்னை செய்த காவலர்கள்

Chennai Police | ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை

  • Last Updated :
  • Chennai, India

திருவொற்றியூரில் உள்ள ஓட்டலில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில்

இரவு பணி முடிந்து கணக்கர் தெருவில் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் காவலர்கள் 5 போலீசார் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்கள், பரோட்டாவுக்கு பாயா கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டல் ஊழியர்கள், சேர்வா மட்டும்தான் உள்ளது. பாயா இல்லை, என்று கூறியுள்ளனர்.

இதனால், காவலர்கள் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். போலீசார் ஓட்டலில் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையும் படிங்க:  110 சவரன் நகைகள்... 5 கிலோ வெள்ளி பொருட்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பணிப்பெண்!

இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஏட்டு கோட்டமுத்து, காவலர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

First published:

Tags: Chennai, Chennai Police, Crime News