முகப்பு /செய்தி /சென்னை / செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

தருமபுரி ஆதினம்

தருமபுரி ஆதினம்

Dharmapuri Aadhinam | சேரர் சோழர் பாண்டியர் மூன்று மன்னர்களாலும் ஆதீனங்களின் சீடர்களாக விளங்கி இருக்கிறார்கள் - தருமபுரம் ஆதினம்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

டெல்லியில் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சென்றார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நந்தி என்பது தர்ம தேவதை எனவும், அது அனைத்து மதத்திற்கும் பொதுவானது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, தங்க மூலம் பூசப்பட்ட வெள்ளி தாமரை வடிவத்திலான வாழ்த்து மடலை பிரதமரிடம் வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

top videos

    அழைப்பிதழில் ஆதினங்களின் புகைப்படம் போடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அதிகமான ஆதீனங்கள் கலந்து கொள்வதால் புகைப்படங்கள் போடாமல் இருந்து இருக்கலாம் என கூறினார். மேலும், சேரர், சோழர், பாண்டியர் என மூன்று மன்னர்களாலும் ஆதீனங்களின் சீடர்களாக விளங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு மன்னர்களுக் ஆதீனங்கள் அரசவையில் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். செங்கோல் ஆதீனம் என்று ஒரு ஆதீனம் இருக்கிறது என தெரிவித்தார்.

    First published:

    Tags: Chennai