முகப்பு /செய்தி /சென்னை / திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு : கவனம் பெற்ற புதுமண தம்பதியின் முன்னெடுப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு : கவனம் பெற்ற புதுமண தம்பதியின் முன்னெடுப்பு

மணமக்கள்

மணமக்கள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டிக்கான தம்பதிகள் முன்பதிவு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

திருமணமான தம்பதி வரவேற்பு நிகழ்ச்சியின் போது ஜோடியாக மாரத்தான் போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலை பெருங்குடி கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த பிரபு - பாரதி ஆகிய இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்தில், கலைஞர் மெமோரியல் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டிக்கான பதிவு மையம் அமைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், மண மேடையில் இருந்த தம்பதி இருவரும் மாலை கழுத்துமாக வாயிலுக்கு வந்து சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாரத்தான் பந்தயத்தில் கலந்துகொள்ளப் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மனைவியோடு மாரத்தான் ஓட முன்பதிவு செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

top videos

    செய்தியாளர் - ப.வினோத் கண்ணன்.

    First published:

    Tags: Chennai, Viral News