முகப்பு /செய்தி /சென்னை / அதிகாலை நேரத்தில் சைட் ஸ்டேண்டை உடைத்து பைக்குகளை திருடும் கும்பல்.. சென்னையில் பயங்கரம்- 4 பேர் சிக்கியது எப்படி?

அதிகாலை நேரத்தில் சைட் ஸ்டேண்டை உடைத்து பைக்குகளை திருடும் கும்பல்.. சென்னையில் பயங்கரம்- 4 பேர் சிக்கியது எப்படி?

பைக் திருடர்கள்

பைக் திருடர்கள்

Chennai bike theft | OLX-ல் பைக்கை வாங்கி அதற்கேற்றவாரு திட்டமிட்டு பைக்குகளை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை, வடசென்னை பகுதிகளான முத்தியால்பேட்டை, வண்ணாரப்பேட்டை, யானைகவுனி, ஏழு கிணறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வேலைகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புகார்கள் குவிந்தன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக பூக்கடை துணை ஆணையரின் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒரு திருட்டு சம்பவத்திலும் சிசிடிவி காட்சியில் திருடர்களின் முகம் பதியவில்லை. இதே போல கடந்த மாதம் முத்தியால் பேட்டை பகுதியில் வீட்டருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, தெருவில் சம்பந்தமில்லாத இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு நாளன்று நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மறுநாள் அந்த வாகனத்தை எடுக்க வந்த போது சிசிடிவி காட்சிகளில் திருடனின் முகம் பதிவாகி உள்ளது.

இதையடுத்து பதிவான முக அடையாளங்களை வைத்து தனிப்படை போலீசார் அவர் சென்ற பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது முகம் தெளிவாக பதிந்துள்ளது. விசாரணையில் பழைய குற்றவாளியான எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த ரதீஷ்குமார் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ரதீஷ் குமார், அவரது கூட்டாளி ராயபுரத்தை சேர்ந்த விஷ்ணு வர்தன்(29), பைக் மெக்கானிக் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்(37) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ரதீஷ் குமார் முத்தியால்பேட்டை, யானை கவுனி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுகலான சந்துகளில் நிற்கக்கூடிய இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு அதிகாலை வேளைகளில் சென்று பைக்கின் சைடு லாக்கை உடைத்து நொடி பொழுதில் இரு சக்கர வாகனத்தை திருடும் செயலில் பல ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது.

10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் ரதீஷ்குமார் மீது உள்ள நிலையில் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்கின் மீது ஆர்வம் கொண்ட ரதீஷ்குமார், அந்த பைக்கை திருத்தி அமைக்க கோடம்பாக்கத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவரிடம் சென்ற போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் வேலூருக்கு சென்ற மெக்கானிக் வெங்கடேசிடம், தான் திருடி வரும் வாகனத்தை இதே போன்று மாற்றி கொடுத்தால் போலீசாரிடம் சிக்காமல் அதிக பணம் சம்பாதிக்கலாம் என மெக்கானிக் வெங்கடேஷிடம் ஆசை வார்த்தை கூறி திருட்டு தொழிலில் இணைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறிப்பாக மெக்கானிக் வெங்கடேஷ் ஓஎல்எக்ஸில் குறைந்த விலைக்கு கிடைக்கும் மிக பழைய வண்டியை வாங்கி, அதே வகையிலான இருசக்கர வாகனத்தை திருடுமாறு சென்னையில் உள்ள ரதீஷ்குமாரிடம் தெரிவிக்கிறார். அதன் அடிப்படையில் ரதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளி விஷ்னு வர்தனுடன் இணைந்து முத்தியால்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், யானை கவுனி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடமாக நோட்டமிட்டு அதிகாலை வேலையில் நொடி பொழுதில் இருசக்கர வாகனத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

திருடிய வாகனத்தை வேலூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று மெக்கானிக் வெங்கடேஷிடம் கொடுத்தவுடன், அவர் ஏற்கனவே ஓஎல்எக்ஸ் இல் வாங்கிய வண்டியின் சேசிஸ் எண்ணை இந்த திருட்டு வண்டியில் அச்சடித்து, நம்பர் பிளேட்டையும், பாகங்களையும் மாற்றி புது வண்டியை போல் மாற்றி பின்னர் இந்த கும்பல் விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஸ்பெளண்டர், கரிஷ்மா போன்ற வண்டிகளை மட்டுமே குறிவைத்து திருடி மாற்றி, நெருங்கிய வட்டாரங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 70ஆயிரம் ரூபாய்க்கு வண்டியை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 1.5 வருடங்களாக இந்த கும்பல் இதே போல 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி நூதன முறையில் ஆவணங்களை மாற்றி விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருட்டு வண்டியை விற்று கிடைக்கும் பணத்தில் விலையுயர்ந்த மது, பெண் என இந்த கும்பல் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஜினி குறித்து தொடர் விமர்சனம்- செய்தியாளர் கேள்விக்கு ரோஜா கொடுத்த ரியாக்ஷன்

இவர்களிடமிருந்து 12 திருட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சேசிஸ் எண்ணை மாற்றும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், பின்னர் இவர்களிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Bike Theft, Chennai, Crime News