முகப்பு /செய்தி /சென்னை / வண்டலூரில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து..

வண்டலூரில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து..

விபத்தில் சிக்கிய லாரி

விபத்தில் சிக்கிய லாரி

Vandalur Lorry Accident | சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்து நடந்த இடத்தில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Vandalur, India

சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை டோல்கேட் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

சென்னை மீஞ்சூர் - வண்டலூர் பைபாஸ் சாலையில் வழியாக வண்டலூர் நோக்கி ரெடிமிக்ஸ் சிமெண்ட் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இரு பைபாஸ் சாலையின் நடுவே உள்ள  20 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் உதவியாளர்  சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வாகன உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு கிரைன் மற்றும் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் வாகனத்தின் ஒரு பகுதியை மீட்டனர். மேலும் இரண்டு மணிநேரமாக போராடி 40 டன் சிமெண்ட் இருந்த பகுதியை தூக்க முடியாததால் உடைத்து  அதில் உள்ள சிமெண்டை வெளியே எடுத்தனர்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு மரண அடி...” - கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கே.பாலகிருஷ்ணன் கருத்து..!

அதன் பிறகு காலி கண்டெய்னர் தூக்கி நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்து நடந்த இடத்தில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் மிகுந்த நெரிசலுடன் ஒரு மணி நேரமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இது குறித்து போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்ட பொழுது விபத்து தொடர்பான எந்த தகவல்களும் தங்களுக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

First published:

Tags: Accident, Vandaloor zoo