முகப்பு /செய்தி /சென்னை / மெரினா போறீங்களா... இன்று முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

மெரினா போறீங்களா... இன்று முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சனி, ஞாயிற்றுகிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தடுப்பதற்காக விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படாது.

கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலையை சென்றடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

இதையும் படிங்க: ஊட்டியில் இப்படி ஒரு பூங்கா இருக்கா? இத்தனை நாள் தெரியாம போச்சே!

ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக செல்லலாம். நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.

top videos

    விக்டோரியா சாலை ஒரு வழிபாதையாக மாற்றப்படுவதால் பாரதி சாலையில் இருந்து விக்டோரியா சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். எனினும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    First published: