முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே உஷார்... கைநிறைய போலி சாவியுடன் சுற்றும் பைக் திருடர்கள்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை மக்களே உஷார்... கைநிறைய போலி சாவியுடன் சுற்றும் பைக் திருடர்கள்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

பைக் திருட்டு

பைக் திருட்டு

இரு சக்கர வாகனத்தின் முன்பக்க லாக் கை உடைத்து பட்டப்பகலில் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • Last Updated :
  • Thirunindravur (Thiruninravur), India

திருநின்றவூரில் கை நிறைய சாவியுடன் வலம் வரும் திருடர்கள் வாகனத்தின் முன் பக்கத்தை லாவகமாக உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூர் நடுகுத்தகையில் தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. இங்கு திருநின்றவூர், பட்டாபிராம்,நெமிலிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர்கள்,இளைஞர்கள் வந்து குளித்துவிட்டு நண்பர்களுடன் பொழுதை போக்குவது வாடிக்கை. அவ்வாறு நீச்சல் குளத்திற்கு வந்த ஒருவர் வாகனத்தினை வாயில் முன்னர் நிறுத்தி வைத்து விட்டு உள்ளே சென்று குளித்துவிட்டு வந்து வீட்டிற்கு செல்ல வாகனத்தை பார்த்தபோது வாகனம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 3பேர் கொண்ட கும்பல் வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

அந்த காட்சிகளில் இருவர் ஒரு வாகனத்தில் வருகின்றனர். அதில் ஒருவர் திருடுவதற்கென்றே  பல்வேறு சாவிகளை கொண்டு ஒவ்வொன்றாக பயன்படுத்தி திறக்க முயற்சி செய்கிறார்.ஆனால் அவரால் அந்த வாகனத்தினை ஆன் செய்ய முடியவில்லை.

மேலும் மற்றொரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மற்றொரு சாவியை வைத்து அந்த வாகனத்தினை திறக்க முயற்சி மேற்கொள்கிறார்.முதலில் தோல்வியடையவே பின்னர் மற்றொரு சாவியை கொண்டு திறக்க முயற்சி செய்கிறார்.அப்பொழுது அவருடன் வந்த மற்றொரு நபர் இரு சக்கர வாகனத்தின் முன்பக்க சக்கரத்தினை பிடித்துக்கொண்டு லாக் கை உடைத்து வாகனத்தினை பட்டப்பகலில் திருடி செல்கின்றனர்.

செய்தியாளர்: கன்னியப்பன் 

First published:

Tags: Chennai, Crime News, Tamil News, Thiruvallur