முகப்பு /செய்தி /சென்னை / ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி... கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் கைது..!

ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி... கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் கைது..!

கொலை செய்தவர்

கொலை செய்தவர்

Tambaram murder | 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி கடந்த 3 மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா (30) - பூமாதேவி (26) தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இருவரும் கடந்த 10  வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு மணிமங்கலம் அருகே தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 8 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், படப்பை அடுத்த ஓரத்தூரை சேர்ந்த சுந்தர் என்பவருக்கும், பூமாதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இருவரும் கடந்த 3 மாதங்களாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே பூமாதேவி சுந்தருடன்  ஊர் சுற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று இருவரும் ஒன்றாக சென்றதை கண்டு ஆத்திரமடைந்த சிவா பின் தொடர்ந்து சென்று மனைவியை வாகனத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்த பூமாதேவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பூமாதேவியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்: சுரேஷ், தாம்பரம்.

First published:

Tags: Crime News, Murder, Tambaram