முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் வணிக வளாக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து... பொதுமக்கள் அச்சம்

சென்னையில் வணிக வளாக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து... பொதுமக்கள் அச்சம்

தீ விபத்து

தீ விபத்து

சென்னை ராயப்பேட்டையிலுள்ள வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற வணிகவளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் தனியார் தொலைகாட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மின் கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என வணிக வளாக ஊழியர்கள் தீயணை,ப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் இருந்த செல்போன் டவரில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அறிந்து ஸ்கை லிப்ட் வாகனம் மூலமாக தீயணைப்புத் துறையினர் மொட்டை மாடிக்கு சென்று போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரணையில் மொட்டை மாடியில் இருந்த செல்போன் டவரில் உள்ள வயர்களில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. நல்வாய்ப்பாக இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published: