சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாட்டி வதைத்த கடுமையான வெயிலுக்கு பிறகு திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. அதில், சென்னையில் நிலவும் கடுமையான வெயிலின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 25 ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான கொரட்டூர், திருமங்கலம், முகப்பேர், பாடி, அம்பத்தூர், கள்ளிக்குப்பம், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பிறகு கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் வெயில் தணிந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் சாலையோரம் மேம்பாலங்களுக்கு அடியில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் தஞ்சமடைந்தனர். கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொளுத்தும் வெயிலில் குஷிப்படுத்த வருகிறது கனமழை...என்ஜாய் மக்களே..! தமிழ்நாடு வானிலை அப்டேட்..
அதேபோல, கோயம்பேடு, மதுரவாயல் ,போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், ஐயப்பன்தாங்கல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர் மற்றும் திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.