முகப்பு /செய்தி /சென்னை / "சில்லென்ற சென்னை” - சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

"சில்லென்ற சென்னை” - சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் மழை

சென்னையில் மழை

Chennai Rain | காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் சாரல் மழை பெய்து வருதால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடை வேப்பம் பொதுமக்கள் வாட்டி வதக்கி வருகின்றது. இதனால் பொதுமக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் பல்வேறு மாற்று வழிகளை தேடி வெப்பத்தை சமாளித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து மக்கள் மகிழ்வித்து வருகிறது.

இதையும் படிங்க: உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள க்ளிக் செய்யவும்

மேலும் சென்னையில் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் லேசான தூரல் மழை பெய்தது. சென்னையில் காலையில் இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகின்றது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர்,கோவை வால்பாறையில் தலா 7செ.மீ மழை பதிவாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai rains