சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் கடந்தாண்டை விட, புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் கடந்த மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஜனகவள்ளி என்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அவரது கணவர் குற்றம்சாட்டினார்.
சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கீழ், 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சுகாதார மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன. இங்கு, காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரை 94,35,000 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதே நேரம், 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரை, 1,00,08,000 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதாவது 10 லட்சத்துக்கும் மேல் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ள நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக சிகிச்சை பெறுவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே மருத்துவர்கள் வருகை தருகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
சென்னையில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாத இடங்களில் பிரசவங்கள் பார்க்க கூடாது என்றும், வசதி இல்லாத இடங்களில் இலக்கு நிர்ணயித்து பணி செய்ய நிர்பந்திக்கக்கூடாது என்றும் கூறுகிறார் மருத்துவர் சாந்தி. சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் இருக்கும் குறைபாடுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்.. அமைச்சராக பதவியேற்கும் டிஆர்பி ராஜா
அதேபோல், சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவதோடு, பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Govt hospitals