முகப்பு /செய்தி /சென்னை / மெட்ரோ ரயில்களில் பயணிக்க இனி வாட்ஸ் ஆப்லயே டிக்கெட் வாங்கலாம் - சென்னையில் நாளை முதல் புதிய வசதி அறிமுகம்!

மெட்ரோ ரயில்களில் பயணிக்க இனி வாட்ஸ் ஆப்லயே டிக்கெட் வாங்கலாம் - சென்னையில் நாளை முதல் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸாப்பில் மெட்ரோ டிக்கெட்

வாட்ஸாப்பில் மெட்ரோ டிக்கெட்

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க ஏற்கெனவே பயண அட்டை, க்யூ ஆர் கோடு ஆகியவற்றை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நாளை (மே 16-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக, பயண அட்டை முறை, 'க்யூ ஆர்' குறியீடு முறை போன்றவை நடைமுறைகள் உள்ளன. இதன் அடுத்தக் கட்டமாக வாட்ஸ் ஆப் வாயிலாக எளிமையாக டிக்கெட் எடுக்கும் வசதி நாளை முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

டிக்கெட் வாங்குவது எப்படி?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ’ஹாய்( Hi)' என்று குறுந்தகவல் அனுப்பினால் ‘ஷார்ட் போட்' என்ற தகவல் வரும்.
அந்த ஷார்ட் போடில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து வாட்ஸ்-அப் மூலமோ, ஜிபே, யு-பே மூலமோ பணம் செலுத்தினால், டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துவிடும்.
இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவாயில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.
வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published:

Tags: Chennai metro, Metro Rail