முகப்பு /செய்தி /சென்னை / தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

மெரினாவில் உள்ள கட்டிடங்களில் வரையப்படும் ஓவியங்கள்

மெரினாவில் உள்ள கட்டிடங்களில் வரையப்படும் ஓவியங்கள்

டெல்லி, மும்பை, ஹைதராபாத், கோவா போன்ற நகரங்களிலும், சென்னையில் கண்ணகி நகரிலும் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். நீலக்கடலால் மின்னும் மெரினாவுக்கு மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 'ஸ்ட்ரீட் ஆர்ட் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் மெரினாவின் லூப் சாலையில் உள்ள கட்டடங்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக மெரினா நொச்சிக்குப்பத்தில் கடற்கரையோரம் உள்ள கட்டடங்களில் 8,000 சதுர அடிக்கு ஓவியம் வரையப்பட உள்ளது. கைகளில் தூரிகைகளுடன் மெக்சிகோ, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

ஏற்கனவே டெல்லி, மும்பை, ஹைதராபாத், கோவா போன்ற நகரங்களிலும், சென்னையில் கண்ணகி நகரிலும் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாகவே இந்த சுவரோவியங்கள் வரையப்படுவதாக ஸ்ட்ரீட் ஆர்ட் அமைப்பை சேர்ந்த சதீஷ் தெரிவித்தார்.

மேலும் ஆர்ட் கேலரிகளில் மட்டுமே பார்க்கக்கூடிய ஓவியங்களை, சாதாரண மக்களும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என கேரளாவைச் சேர்ந்த ஓவியர் ஜினில் தெரிவித்தார்.

மெரினாவை கலைநகரமாக மாற்றும் பணிகள் கடந்த 5 நாட்களாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் பணிகள் நிறைவு பெற்று, முழுமையான சித்திரங்களை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என ஓவியர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Chennai, Marina Beach, Painting