முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் நள்ளிரவை குளிர்வித்த மழை.. இதமான காலைப் பொழுது..!

சென்னையில் நள்ளிரவை குளிர்வித்த மழை.. இதமான காலைப் பொழுது..!

சென்னை நள்ளிரவு மழை

சென்னை நள்ளிரவு மழை

Chennai Rains | சென்னையில் நள்ளிரவில் மீண்டும் கனமழை பெய்த நிலையில், மின் சேவை சில இடங்களில் பாதிக்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் வெயிலால் மக்கள் தவித்து வந்த வேலையில் நேற்று திடீரென இடி மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்பட பல பகுதிகளில் சாரல் மழையும் பின்னர் இடியுடன் பலத்த மழை பெய்தது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.

இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவும் மீண்டும் மழை பெய்தது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் மழை நீடித்தது. சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைகாரணமாக மின் சேவை ஆங்காங்கே பாதிக்கப்பட்டது.

இதனிடையே சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு பெய்த மழையில் காலை நடைபயிற்சிக்காக சென்றவர்கள் வானிலை இதமாக உள்ளது என கருத்து தெரிவித்துவிட்டு சென்றனர்.

First published:

Tags: Chennai Rain, Chennai rains, Rain updates