சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒரு பாதையில் மட்டும் விரைவு ரயில்கள் அல்லது சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ இயலாத நிலை உள்ளது.
இதனால் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரயில்வே பரிந்துரைத்தது. அதன்பேரில், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 31ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதனால் பயணிகளுக்கு அதிகளவு இடையூறு ஏற்படும் சூழல் உருவாகியதை அடுத்து, நான்காவது வழிப்பாதையை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதையடுத்து சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai local Train, Chepauk, Electric Train