முகப்பு /செய்தி /சென்னை / தவறி விழுந்த நண்பனை காப்பற்ற சென்ற இளைஞர்... ரயில் மோதி பலியான சோகம்...!

தவறி விழுந்த நண்பனை காப்பற்ற சென்ற இளைஞர்... ரயில் மோதி பலியான சோகம்...!

மின்சார ரயில்

மின்சார ரயில்

கடற்கரை நோக்கி அதிவேகத்தில் சென்ற மின்சார ரயில் கௌதம் மீது மோதியது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் செல்லும் தங்களது நண்பரை வழி அனுப்புவதற்காக திருப்பத்தூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி, கவுதம் உள்ளிட்ட 4 பேர் சென்னை வந்தனர். பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது, மாம்பலம் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் சென்றபோது ஆசைத்தம்பி திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதையும் படிங்க: மிரட்டல்களுக்கு அஞ்சாத விஏஓ.. மணல் கொள்ளையை தடுக்க முயன்ற நேர்மை அதிகாரிக்கு நேர்ந்த துயரம்...!

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன், ஆசைத்தம்பியை காப்பாற்றுவதற்காக ரயில் தண்டவாளத்தில் ஓடினர். அப்போது கடற்கரை நோக்கி அதிவேகத்தில் சென்ற மின்சார ரயில் கௌதம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயிலில் இருந்து தவறி விழுந்ததில், லேசான காயத்துடன் உயிர் தப்பிய ஆசைத்தம்பி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

First published:

Tags: Chennai local Train