முகப்பு /செய்தி /சென்னை / மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

கைது செய்யப்பட்ட 4 நபர்கள்

கைது செய்யப்பட்ட 4 நபர்கள்

Chennai Hotel Staff Harresment | சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் இணைந்து ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை இரவும் "Hotels in Day"  என்ற ராஜ மது விருந்து விழா நடத்துவது வழக்கம்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் எழும்பூரில் மது போதை விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் இணைந்து ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை இரவும் "Hotels in Day"  என்ற ராஜ மது விருந்து விழா நடத்துவது வழக்கம். இந்த ராஜ மது விருந்து விழாவானது ஒவ்வொரு திங்கள்கிழமையும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் நடைபெறுகிறது.  மூன்று அல்லது நான்கு நட்சத்திர விடுதிகளின் மேலாளர்கள் மற்றும் உயர் நிர்வாகிகளை அழைத்து ரேண்டம் முறையில் வெவ்வேறு நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் கடந்த திங்கள்கிழமை இரவு MRC நகரில் உள்ள பிரபல நடசத்திர விடுதி, தி நகரில் பிரபல நட்சத்திர விடுதி மற்றும் எழும்பூரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி என அவற்றின் மேலாளர்கள், நிர்வாகிகள் எழும்பூர் ரேடிசன்ஸ் ப்ளூ என்ற நட்சத்திர விடுதியில் நடந்த "Hotels In Day" என்ற ராஜ மது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, MRC நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் மேலாளர் ரமேஷ் என்பவர் தனது நண்பர்கள் தினேஷ் மற்றும் பெண் தோழியுடன் எழும்பூர் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற "ஹோட்டல்ஸ் இன் டே" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்குள்ள பாரில் மது அருந்தி ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது அங்கு ஏற்கன்வே மது போதையில் நடனமாடிக் கொண்டிருந்த மற்ற நட்சத்திர விடுதியின் ஊழியர்கள் ரமேஷின் பெண் தோழியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரமேஷ் மற்றும் ரமேஷின் நண்பர் தினேஷ் ஆகியோர் தங்களது பெண் தோழியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மற்ற நட்சத்திர விடுதியின் ஊழியர்களிடம் இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

இந்த தகராறில் சுமார் எட்டு நபர்கள் இணைந்து ரமேஷ் மற்றும் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பீர் பாட்டிலால் ரமேஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். பலத்த காயமடைந்த ரமேஷுக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

top videos

    இந்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ரமேஷை தாக்கிய வெங்கடேஷ் (எ) வெங்கடேஸ்வராவ்(30), பழஞ்சி ஸ்ரீனிவாஸ்(47), சந்திரசேகர ரெட்டி (34), யோகேஷ்(31) ஆகிய நான்கு நபர்களை எழும்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai, Crime News