சென்னை சாலிகிராமம் திலகர் தெருவை சேர்ந்தவர் கங்காதரன்(60). சித்த மருத்துவரான இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வருகிறார். இவருக்கு சாருமதி(57) என்ற மனைவியும், ஜனப்பிரியா(24) என்ற மகளும் உள்ளனர். சாருமதி நெடுஞ்சாலை துறையில் கண்காணிப்பாளராகவும், ஜனப்பிரியா 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக சித்த மருத்துவ தொழில் நஷ்டத்தில் செல்வதால் கங்காதரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதேபோல நேற்று நள்ளிரவும் பிரச்சனை ஏற்படவே, கங்காதரன் மருத்துவத்திற்காக வைத்திருந்த தூக்க மாத்திரைகளை வற்புறுத்தி மனைவி சாருமதி மற்றும் மகள் ஜனப்பிரியா ஆகியோருக்கு கொடுத்து உட்கொள்ள வைத்து பின்னர் அவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் ஜனப்பிரியா தனது உறவினரான ஹேமலதா என்பவருக்கு, தனது தந்தை வற்புறுத்தி விஷம் கொடுத்துவிட்டதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனை கண்ட ஹேமலதா உடனடியாக அவரது நண்பருடன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மூவரும் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளனர்.
மூன்று நபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பின்பு, இவர்களை பரிசோதனை செய்த போது கங்காதரன் மற்றும் ஜனபிரியா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சாருமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இறந்த ஜனப்பிரியாவின் செல்போனை கைப்பற்றி சைபர் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Family, Suicide