முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. இனி ஒரே இ-டிக்கெட் முறை!

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. இனி ஒரே இ-டிக்கெட் முறை!

சென்னை

சென்னை

Chennai E ticket | ஒவ்வொரு பயணிகளின் பயண விவரங்களுக்கு ஏற்ப பயணக்கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்க ஒரே இ-டிக்கெட், ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனியாக செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானதாகும். இங்கு மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது.

இதனால் நேர விரயமும், அலைச்சலும், பயணத்தில் சிரமமும் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி, அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயணிக்கலாம்.

இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

இதற்கான டெண்டர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென தனி செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலியில் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடம் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயணிகளின் பயண விவரங்களுக்கு ஏற்ப பயணக்கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai metro, Train ticket