முகப்பு /செய்தி /சென்னை / அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற கம்யூனிஸ்ட் கவுன்சிலர்... குவியும் பாராட்டு..!

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற கம்யூனிஸ்ட் கவுன்சிலர்... குவியும் பாராட்டு..!

கவுன்சிலர் ரேணுகா காவிரிசெல்வம்

கவுன்சிலர் ரேணுகா காவிரிசெல்வம்

சென்னையில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த மாநகராட்சி கவுன்சிலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 42 ஆவது வார்டு உறுப்பினராக இருப்பவர் ரேணுகா காவிரி செல்வம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்குத் திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது கர்ப்பம் தரித்த ரேணுகா, தண்டையார்பேட்டை அரசு ஆரம்பச் சுகாதார மையத்தில், மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது குழந்தை பிறந்தது. அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களும், முறையான மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read : மார்க் போட காசு.. ரூ.40 கோடி லஞ்சமாம்..? - ஆக்‌ஷனில் இறங்கிய அண்ணா பல்கலைக்கழகம்

கவுன்சிலரான ரேணுகா, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதாக 42 ஆவது வார்டு மக்கள் தெரிவித்தனர். நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த போதிலும், வார்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த ரேணுகா, பிரசவத்துக்கு ஒருநாள் முன்புகூட களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த கவுன்சிலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

First published:

Tags: Govt hospital, Viral