முகப்பு /செய்தி /சென்னை / கள்ளக்காதலியின் பெண்ணுறுப்பில் தீ வைத்து எரித்து கொன்ற கொடூரம்.. சென்னையில் பயங்கரம்

கள்ளக்காதலியின் பெண்ணுறுப்பில் தீ வைத்து எரித்து கொன்ற கொடூரம்.. சென்னையில் பயங்கரம்

கள்ளக்காதலன் கைது

கள்ளக்காதலன் கைது

Chennai crime news | 4வது காதலருடன் தனிமையில் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த 3வது காதலர் அவரை அடித்து கொலை செய்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பின்னர் அவரை அடித்து, எரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த மல்லிகா என்ற பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்ததில் அவர் பெண்ணுறுப்பில் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார், மல்லிகாவின் 2வது மகனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தாயார் மல்லிகா தனியாக வசித்து வந்ததாகவும், மகன் வேறு வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. வழக்கம் போல் தாயை காண வீட்டிற்கு சென்ற போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மல்லிகாவின் முதல் கணவர் முருகன் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததும்,  அதை தொடர்ந்து இரண்டாவதாக முருகன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இரண்டாவது கணவருக்கும், மல்லிகாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்கள் பிறந்துள்ளனர். 4 பேரும் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், இரண்டாவது கணவர் முருகரும் மல்லிகாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

Also Read:  நான்கே நாட்களில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்... மனைவி கண் முன்னே காதலன் எடுத்த விபரீத முடிவு...!

இதனை தொடர்ந்து, மகன்கள் தனி வீட்டிலும், மல்லிகா தனி வீட்டிலும் வசித்து வந்துள்ளார். மல்லிகா கட்டிட வேலைக்கு சென்ற போது மேஸ்திரியாக பணிபுரிந்த ஜெயக்குமாருடன் கடந்த 5 வருடங்களாக பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் கணவன் - மனைவி போன்றே வாழ்ந்து வந்துள்ளனர். மல்லிகாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், இருவரும் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் நண்பரும், ஓட்டுநருமான பாண்டியன் என்பவரை மல்லிகாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஜெயக்குமார். அதனை தொடர்ந்து பாண்டியன் அடிக்கடி மல்லிகா வீட்டிற்கு செல்ல இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

Also Read: ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்த நடிகை - விலகாத மர்மம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

வழக்கம் போல் நேற்றைய முன்தினம் இரவு மல்லிகா வீட்டிற்கு சென்ற ஜெயகுமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மல்லிகா பாண்டியனுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த ஜெயக்குமார், பாண்டியனை திட்டி வெளியேற்றியுள்ளார். பின்னர் இது குறித்து மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஜெயக்குமார் மதுபாட்டிலால் மல்லிகாவின் பெண்ணுறுப்பில் அடித்துள்ளார். தொடர்ந்து மல்லிகாவை சரமாரியாக அடித்து கொலை செய்து, மல்லிகாவின் பெண்ணுறுப்பில் தீ வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து எதுவும் தெரியாதது போல், அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர் .

First published:

Tags: Chennai, Crime News, Murder