முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் மின்சார ரயிலில் கத்தியை தீட்டியபடி கல்லூரி மாணவர்கள் ரகளை

சென்னையில் மின்சார ரயிலில் கத்தியை தீட்டியபடி கல்லூரி மாணவர்கள் ரகளை

சென்னை

சென்னை

ரயில் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய  கல்லூரி மாணவர்கள்  இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை புறநகர் மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பயணித்த கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்தியை நடை மேடையில் தீட்டியபடி  ரகளையில் ஈடுபட்ட காட்சி வைரலான நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நின்று  புறப்பட்ட சமயத்தில், அதில் பயணம் செய்த  கல்லூரி மாணவர்களின் கூட்டம் ஒன்று, அபாயகரமாக தொங்கியபடி கையில் இருந்த அலுமினிய  பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படியே, கூச்சலிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : நண்பனுடன் சேர்ந்து கள்ளக்காதலி சித்ரவதை.. ஆத்திரத்தில் இளைஞனை பீர் பாட்டிலில் குத்திக்கொன்ற காதலன்

அதில் ஒரு மாணவன் ஜன்னலில் தொங்கிய படியும் நாங்க எல்லாம் இந்த ( ஒரு குறிப்பிட்ட கல்லூரி பெயரைக் கூறி) காலேஜ், எங்கக்கிட்ட வம்பு வச்சுக்காதீங்க என கோஷம் போட்டுக் கொண்டு,  பயணம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஆதாரமாக கொண்டு, ரயில்வே பாதுகாப்புப்படை காவலர், ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ரயில்வே சட்டம் 1989 ன் படி வழக்கு பதிந்து, ரயில் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய  கல்லூரி மாணவர்கள்  இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : கன்னியப்பன்

top videos
    First published:

    Tags: Chennai, Crime News, Railway Station