முகப்பு /செய்தி /சென்னை / சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய கேலரி திறப்பு - ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, தோனி!

சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய கேலரி திறப்பு - ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, தோனி!

சேப்பாக்கம் கேலரிகளை திறந்து வைத்த முதலமைச்சர்

சேப்பாக்கம் கேலரிகளை திறந்து வைத்த முதலமைச்சர்

Chepauk stadium galleries | கடந்த 2011ஆம் ஆண்டு மைதானம் 186 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நேரத்தில் அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி பெவிலியன் மட்டும் புனரமைக்கபடாமல் இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோர் பங்கேற்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கேலரிக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய கேலரிக்களை திறந்து வைத்தார். இதில் முதல்வருடன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், சிஎஸ்கே கேப்டன் தோனி பங்கேற்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  ஸ்டேண்ட்க்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீல்வைக்கப்பட்ட ஐ.ஜே.கே கேலரிகளை மீண்டும் திறக்க கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் முதன்முறையாக அந்த கேலரிகளில் ரசிகர்கள் போட்டியை பார்க்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

மொத்தமாக 35ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக புனரமைக்கப்பட்டு உள்ள அண்ணா பெவிலியன் முதல் தளத்தில் வீரர்கள் நவீன வசதிகளுடன் உள்ளரங்கில் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகள் மைதானத்திற்குள் தங்கள் வீல் சாருடன் சென்று போட்டியை பார்க்கும் வகையில்  கேலரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

First published:

Tags: Chennai, Chepauk, CM MK Stalin, MK Stalin