முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

சென்னையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்

இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்

Chennai Building Collapse | கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் 4மாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டட இடிபாடுகள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai, Tamil News