முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் திடீரென்று இடிந்துவிழுந்த 50 ஆண்டு பழைய கட்டிடம்...

சென்னையில் திடீரென்று இடிந்துவிழுந்த 50 ஆண்டு பழைய கட்டிடம்...

இடிந்து விழுந்த கட்டிடம்

இடிந்து விழுந்த கட்டிடம்

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அமைந்திருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வசந்த் தியேட்டர் அருகே உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்தக் கட்டிடத்தில் உறுதித் தன்மை இல்லாத நிலையில், அதனை இடிக்க வேண்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மாநகராட்சியின் நோட்டீஸையடுத்து, அந்த வீட்டில் இருந்த நபர்கள் காலி செய்தனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லை. இந்தநிலையில், நேற்று மழை பெய்தநிலையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலையில் திடீரென்று கட்டிடம் இடிந்துவிழுந்தது.

அதிர்ஷ்டவசமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், இடிந்து விழுந்த கட்டிடத்தின் பகுதியில் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

எழும்பூர், வேப்பேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Chennai