முகப்பு /செய்தி /சென்னை / இயக்குநர் விக்ரமன் வீட்டில் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!

இயக்குநர் விக்ரமன் வீட்டில் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!

இயக்குநர் விக்ரமன்

இயக்குநர் விக்ரமன்

தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல, உன்னை நினைத்து உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரமன் தனது குடும்பத்தோடு  சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார்.

இயக்குநர் விக்ரமனின் நெருங்கிய உறவினர் பெண்ணான ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த ருக்குமணி என்பவர் அடிக்கடி இயக்குநர் விக்ரமன் வீட்டுக்கு தனது குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3 ம் தேதி காலை 9.30 மணியளவில் ருக்குமணி, விக்ரமன் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

சரியாக காலை 11 மணியளவில் ருக்குமணி தனது வீட்டுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டப்போது இயக்குநர் விக்ரமன் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படிக்க : விஜய்யின் 68வது படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர்!? 

பின் இயக்குநர் விக்ரமன், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இரண்டு இளைஞர்கள் சட்டையால் முகத்தை மூடி வந்து இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து ருக்குமணி குமரன் நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    இந்த சம்பவம் குறித்து இயக்குநர் விக்ரமன் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில், தங்களது குடியிருப்பு பகுதியில் இது போன்றதொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை எனவும் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இயக்குநர் விக்ரமன் கூறினார்.

    First published:

    Tags: Bike Theft, Chennai, Crime News