முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் தங்கும் விடுதிகளை குறிவைத்து இருச்சக்கர வாகன திருட்டு : வெளியான பகீர் சிசிடிவி காட்சி!

சென்னையில் தங்கும் விடுதிகளை குறிவைத்து இருச்சக்கர வாகன திருட்டு : வெளியான பகீர் சிசிடிவி காட்சி!

இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சிகள்

இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சிகள்

  • Last Updated :
  • Chennai, India

சென்னை வளசரவாக்கத்தில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (28)சென்னை போரூர் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் விடுதியில் தங்கி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி இரவு தான் தங்கி இருக்கும் ஆண்கள் விடுதி வாயிலில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்த போது தன் இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் தன் இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பது குறித்து வளசரவாக்க காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வாகனம் திருடு போய் இருப்பது குறித்து வழக்கு பதிவு செய்து வாகனத்தை திருடியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பாஸ்கரின் வாகனத்தை இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பிரதான நகரான வளசரவாக்கம், போரூர் போன்ற பகுதிகளில் அடுத்தடுத்து தனியார் விடுதியில் தங்கியிருக்கும் இளைஞர்கள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை செய்யும் இளைஞர்களின் இரு சக்கர வாகனத்தை குறிவைத்து திருடி செல்லும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos

    செய்தியாளர் - சோமசுந்தரம்

    First published:

    Tags: CCTV, Chennai, Crime News