முகப்பு /செய்தி /சென்னை / ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - பாஜக நிர்வாகி அலெக்ஸ்

ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - பாஜக நிர்வாகி அலெக்ஸ்

போலீசாரிடம் ஆஜரான பாஜக நிர்வாகி அலெக்ஸ்

போலீசாரிடம் ஆஜரான பாஜக நிர்வாகி அலெக்ஸ்

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கு. பாஜக பிரமுகரிடம் 1 மணி நேரமாக  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு  வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் ரூ.2,400 கோடி மோசடியில் ஈடுபட்டது. இந்த வழக்கில் இதுவரை 11 நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், இயக்குனருமான ஹரிஷை 11 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி இருப்பதும், அந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ஆகியோர் பதவி வாங்கி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் நேற்று அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் பிறப்பித்தனர். இந்த சம்மன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் நேற்று(ஏப்ரல் 12)  மாலை 4 மணியளவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு 1 மணி நேரமாக விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் அலெக்ஸ், பாஜக நிர்வாகி ஹரிஷ் ஆருத்ரா வழக்கு தொடர்பாக தன்னிடம்  வந்ததாகவும், அவருக்கு சில ஆலோசனைகள் வழக்கறிஞர் என்ற முறையில் அளித்ததாகவும், அவரை இதுவரை ஒரு முறை தான் சந்தித்தாகவும், 5 முறை செல்போனில் பேசியதாகவும் மற்றப்படி தனக்கும் அவருக்கும் எவ்வித தொடர்புமில்லை என போலீசாரிடம் தெரிவித்ததாக கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 10 நாள்களில் 72 போலி மருத்துவர்கள் கைது - காவல்துறை அதிரடி

மேலும் அவர், "தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜகவில் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நிலை இல்லை எனவும் அந்த நிலைமை எப்போதுமே வராது. மேலும் போலீசார் கூறியபடி ஹரிஷிக்கும் எனக்கும் எந்த பண பரிவர்த்தனையும்  நடைபெறவில்லை எனவும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்பித்துள்ளேன்.

top videos

    தன்னை பற்றி போலீசார் வெளியிட்ட அறிக்கை குறித்து விளக்கம் கேட்டுள்ளேன், மறு விசாரணை நடத்த இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளிடம் இருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் ஒப்படைக்கும் படி முதல்வருக்கு கோரிக்கை  வைக்கிறேன்" என அலெக்ஸ் தெரித்தார்.

    First published:

    Tags: BJP, Chit, Scam