முகப்பு /செய்தி /சென்னை / தமிழகம் வருகிறார் அமித்ஷா.... நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வியூகம்... இபிஎஸ்ஸுடன் சந்திப்பா?

தமிழகம் வருகிறார் அமித்ஷா.... நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வியூகம்... இபிஎஸ்ஸுடன் சந்திப்பா?

இபிஎஸ் அமித்ஷா

இபிஎஸ் அமித்ஷா

Amit Shah | வேலூரில் 11-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டுக்கு நாளை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் சூழலில் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். பொதுத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித்ஷா

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.

பாஜக - அதிமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதன் அடுத்தகட்டமாக இந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க... டெல்லி அரசு நிகழ்ச்சியில் 'மோடி' கோஷம் எழுப்பிய பாஜகவினர் - அப்செட்டான கெஜ்ரிவால்...

பாஜக வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் அமித்ஷா கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். பின்னர் வேலூரில் 11-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.

First published:

Tags: ADMK, Amit Shah, BJP, Chennai, Edappadi Palanisami, EPS