முகப்பு /செய்தி /சென்னை / பெரம்பூர் அதிமுக நிர்வாகி கொலை வழக்கு.. 5 பேர் அதிரடி கைது!

பெரம்பூர் அதிமுக நிர்வாகி கொலை வழக்கு.. 5 பேர் அதிரடி கைது!

அதிமுக நிர்வாகி

அதிமுக நிர்வாகி

Admk member murder | அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் நேற்று இரவு சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை பெரம்பூரில் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

48 வயதான இளங்கோவன், அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் வழக்கம் போல் தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு வீடு திரும்பினார். வீட்டின் அருகே சென்ற போது ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செயத செம்பியம் காவல்துறையினர், தப்பியோடிய கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 19 வயதான சஞ்சய், 23 வயது நிரம்பிய வெங்கடேசன் உட்பட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

top videos

    கொலைக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: ADMK, Chennai, Crime News, Murder