முகப்பு /செய்தி /சென்னை / சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் ரூ.2000 நோட்டு வாங்க மறுத்ததால் வாக்குவாதம்

சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் ரூ.2000 நோட்டு வாங்க மறுத்ததால் வாக்குவாதம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ரிசர்வ் வங்கி விரைவில் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதால், 2ஆயிரம் நோட்டுகள் இங்கு வாங்கப்படாது என்று திரையரங்கில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களிடம் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை போரூரை சேர்ந்த கோதண்டராமன் என்பவர், தனது நண்பர்களுடன் பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை காண மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து 3 டிக்கெட்டுகள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை வாங்க மறுத்த திரையரங்க ஊழியர்கள், அருகே வைக்கப்பட்டிருந்த பதாகையை சுட்டிக்காட்டியுள்ளனர்.

top videos

    அதில், ரிசர்வ் வங்கி விரைவில் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதால், 2ஆயிரம் நோட்டுகள் இங்கு வாங்கப்படாது என்றும், வங்கிகளே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க சிறந்த இடம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    First published:

    Tags: Chennai, Theatre