முகப்பு /செய்தி /சென்னை / காதலர்கள் தங்கிய அறையில் கட்டிலுக்கு அடியில் ‘ரூம்பாய்’.. அலறிய இளம்பெண்.. பீச் ரிசார்ட்டில் நடந்தது என்ன?

காதலர்கள் தங்கிய அறையில் கட்டிலுக்கு அடியில் ‘ரூம்பாய்’.. அலறிய இளம்பெண்.. பீச் ரிசார்ட்டில் நடந்தது என்ன?

சென்னை ரிசார்ட்

சென்னை ரிசார்ட்

Chennai Beach resort issue | சுபாஷின் செல்போனை சோதனையிட்டதில் பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கிய பல்வேறு பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. 

  • Last Updated :
  • Chennai [Madras], India

காதல் திரைப்பட நடிகை சந்தியாவின் கணவருக்கு சொந்தமான பீச் ரிசார்ட்டில் காதலர்கள் தங்கியிருந்த அறையில், அத்துமீறி நுழைந்த ரூம்பாய், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேனி பகுதியில் பேர்ல் பீச் எனும் பெயரில் காதல் திரைப்பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசனுக்கு சொந்தமான, பீச் ரிசார்ட் இயங்கி வருகிறது. கடந்த 19ஆம் தேதி இரவு சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த இளைஞர் தனது காதலியுடன் இந்த பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளார். நள்ளிரவில் காதலர்கள் இருவரும் அறையில் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது இதே பீச் ரிசார்ட்டில் ரூம்பாயாக வேலை பார்த்துவந்த சீக்கினாங்குப்பம் பகுதியைச் சோந்த இளைஞர் சுபாஷ்,

காதலர்கள் அறைக்குச் சென்றிருக்கிறார். மாற்று சாவி போட்டு அறையின் கதவை திறந்த சுபாஷ், உறங்கி கொண்டிருந்த இளைஞரின் காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தனது காதலன் தன்னிடம் இது போன்று நடந்து கொள்ள மாட்டாரே என சந்தேகமடைந்து, ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்த இளம்பெண், வேகமாக எழுந்து அறையின் விளக்கைப் போட்டுள்ளார். அப்போது காதலன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததைப் பார்த்து அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதையும் படிங்க:  பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்... ஆத்திரத்தில் மகள் செய்த செயல்... பயத்தில் உறைந்த கிராமம்..!

காதலன் உறங்கி கொண்டிருக்கும் போது வேறு யார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது என அறை முழுக்க சுற்றிப் பார்த்த பெண், கட்டில் அடியில் பார்த்துள்ளார். அங்கு சுபாஷ் மறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இளம்பெண் கத்தி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு எழுந்த காதலன் சுபாசை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தார். இதே பீச் ரிசார்ட்டில் தங்கியிருந்த இளைஞரின் நண்பர்களும் சுபாஷ் அடித்து உதைத்து கூவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் காயமடைந்த சுபாஷை கைது செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் சுபாஷின் செல்போனை சோதனையிட்டதில் பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கிய பல்வேறு பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுபாஷை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீச் ரிசார்ட்டில் காதலனுடன் தங்கியிருந்த  இளம்பெண்ணிடம் ரூம்பாய் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

top videos

    செய்தியாளர்: ராபர்ட், செங்கல்பட்டு.

    First published:

    Tags: Chennai, Crime News, Sexual abuse