முகப்பு /செய்தி /சென்னை / ரூ.535 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற லாரி... தாம்பரம் அருகே பரபரப்பு

ரூ.535 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற லாரி... தாம்பரம் அருகே பரபரப்பு

பழுதாகி நின்ற லாரி

பழுதாகி நின்ற லாரி

காவல்துறையினர் வாகனத்தை இழுவை வண்டி மூலம் அங்கிருந்து எடுத்து சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

  • Last Updated :
  • Tambaram, India

சென்னையில் ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 வாகனங்களில் 535 கோடி பணத்துடன் விழுப்புரம் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தது. அப்போது தாம்பரம் அருகே ஒரு வாகனம் பழுதானதால் சித்த மருத்துவம் மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டது. உடனே இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் வாகனம் பழுதான இடத்துக்கு சென்ற காவல்துறையினர் வாகனத்தை இழுவை வண்டி மூலம் அங்கிருந்து எடுத்து சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று  பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

top videos

    வாகனத்தை சரி செய்த பிறகு விழுப்புரத்துக்கு கொண்டு செல்லலாமா அல்லது சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவார்களா என ஒரு மணி நேரத்திற்கு பிறகு தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 2 வாகனங்களில் 535 கோடி பணத்துடன் லாரி நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Chennai