முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் கணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

சென்னையில் கணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

மாதிரி பாடம்

மாதிரி பாடம்

Chennai | மணலியில் கணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை மணலி பகுதி ஹரி கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ (வயது 15) மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.   கணித தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு ராஜஸ்ரீ இடம் கூறிவிட்டு பெற்றோர் வெளியில் சென்று விட்டனர்.

இந்நிலையில் கணித பாடம் சரியாக ராஜஸ்ரீக்கு வராததால்  பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவயின் பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர்: அசோக் குமார், மணாலி

top videos
    First published:

    Tags: Crime News, Manali, School student, Student Suicide