முகப்பு /செய்தி /சென்னை / நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி.. சென்னையில் அதிர்ச்சி

நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி.. சென்னையில் அதிர்ச்சி

சிறுவன் பலி

சிறுவன் பலி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது 7 வயது உயிரிழந்துள்ளான்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின் போது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது 7 வயது மகன் தேஜா குப்தா. சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி குளத்தில் சிறுவன் கடந்த 10 நாள்களாக பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சிறுவன் நேற்று மாலை 8 மணியளவில் தனது தாத்தாவுடன் நீச்சல் பயிற்சிக்கான வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகியோர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304-a) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also Read:  சென்னையில் 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

கடந்த 13 நாட்களாகக் குழந்தையை நீச்சல் பயிற்சிக்காக அழைத்து வந்ததாகவும், உள்ளே பெற்றோருக்கு அனுமதி இல்லாததால் தான் வெளியில் இருந்ததாகவும், பயிற்சியாளர்கள் அஜாக்கிரதை காரணமாகத் தனது மகன் இறந்துவிட்டதாகவும் உயிரிழந்த 7 வயது சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Boy, Chennai