தீர்த்தவாரி பூஜைக்குச் சென்ற 5 அர்ச்சகர்கள் குளத்தின் சேற்றில் மாற்றி உயிரிழந்த சம்பவத்தின் பகிரவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்வதற்காக சுமார் 20 பேர் பல்லக்கை தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது பல்லாக்கை நிறுத்தி குளத்தில் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் அவர்களில் 5 பேர் திடீரென மாயமாகினர். அதனைத் தொடர்ந்து, வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கித் தேடியதில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. உடல்களைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரும் இளம் வயது அர்ச்சகர்கள் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.