சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மாதம் 30 சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி ரூ. 2,438 கோடி வசூலித்தது. இந்த வழக்கில் 24 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரையில் 13 பேர் கைது செய்யபட்டு அவர்களிடம் இருந்து ரூ. 6.35 கோடி ரொக்கம், ரூ. 1.13 கோடி மதிப்புள்ள நகைகள், 22 கார்கள், 103 அசையா சொத்துகள், ரூ. 96 கோடி வங்கி பணம் மூடக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுக்கு தப்பி ஒடிய ராஜசேகர், அவரது மனைவி உஷா இருவரையும் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நாராயணி, தீபக் கோவிந்த பிரசாத், ரூமேஸ்குமார் ஆகிய மூவருக்கு லுக் அவுட் சர்குலர் அளித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
இந்த நிலையில் பணம் வசூல் செய்து கொடுத்த முகவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனார். 2,000 பேர் முகவர்களாக செயல்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகமாக வசூல் செய்து கொடுத்த முதல் 200 பேரிடம் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 30 சதவீத பணத்தை மீட்க முடியும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Tamil News