முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் போதை பொருள் விற்பனை... 2 பேர் கைது..!

சென்னையில் போதை பொருள் விற்பனை... 2 பேர் கைது..!

போதைப் பொருள் விற்பனை செய்த 2 பேர்

போதைப் பொருள் விற்பனை செய்த 2 பேர்

Chennai | உயர்ரக போதைப்பொருட்களை சென்னையில் விற்பனை செய்ய வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் கூடுதல் துணை ஆணையர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிக்கிய இருவரிடம் இருந்து 1 கிலோ மெத்த பெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  

சென்னை ராயபுரம் பகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த இருவர் போதை பொருட்களை விற்பனை செய்ய சென்னை வந்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் போலீசார் நேற்றிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அதையொட்டி ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100கிராம் அளவில் உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமின் எனும் போதைபொருள் இருந்துள்ளது.

மேலும் படிக்க... பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேர் கைது..!

பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காசிம்(40) மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல்(38) என்பதும் தெரியவந்தது. பின்னர்  இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து இந்த போதை பொருளை வாங்க வந்த இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: அசோக் குமார், திருவெற்றியூர்

    First published:

    Tags: Chennai, Crime News