முகப்பு /செய்தி /சென்னை / Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

டிக்கெட்டுகளை கள்ளசந்தையில் விற்றவர்கள் கைது

டிக்கெட்டுகளை கள்ளசந்தையில் விற்றவர்கள் கைது

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரசிகர்கள் காலை 2 மணி முதலே வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச்சென்ற படங்கள் இணையத்தில் வைரலானது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை, கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டி நடைபெற்றதால், போட்டியைக் காண ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்தது.

இந்த போட்டியை 36 ,400 பேர் நேரில் கண்டுரசித்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரசிகர்கள் காலை 2 மணி முதலே வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றது பார்க்கமுடிந்தது.

இதையும் படிக்க : சேப்பாக்கத்தில் சொதப்பிய இந்தியா..! - ஆறுதல் கொடுத்த சாதனைகள்

இந்நிலையில் கள்ளச்சந்தையில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது சட்டவிரோதமாக கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை விற்பனை செய்ததாக 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 14,500 ரூபாய் மதிப்பிலான 32 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

First published:

Tags: Chepauk, Cricket, Ind Vs Aus, India vs Australia